போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
பாணாவரம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் போலீஸ் நிலையத்தில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகளை சரிபார்த்து, போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும், பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், போலீஸ் நிலையத்தையும் மற்றும் வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
பாணாவரம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ராஜா உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.