சவுதி அரேபியாவில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க மனு

சவுதி அரேபியாவில் இறந்த தந்தையின் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க மனு கொடுத்தாா்.

Update: 2022-09-26 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த கிரிஜா (30), தனது தம்பி விஜய்யுடன் வந்து, கலெக்டரை சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்தார்.அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை அன்பு (54) கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாதுக்கு வீட்டு வேலைக்காக சென்றார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி அங்குள்ள வணிக வளாகத்தில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால் இது வரை அவரது உடலை எங்களிடம் அந்த நாட்டு அரசு ஒப்படைக்கவில்லை. ஆகவே எங்களது தந்தை உடலை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை பெற்ற கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கண்ணீ ருடன் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் நலச்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்