பாலக்கோடு அருகேவாகனம் மோதி கட்டிட மேஸ்திரி பலி

Update: 2023-04-22 18:45 GMT

பாலக்கோடு:

தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 45). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து மகாலிங்கம் பெங்களூருவில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பாலக்கோடு அருகே மாதம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாலக்கோடு போலீசார் மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்