எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அங்கு நின்றவர்கள் முதியவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்ததில் இறந்தவர் ஈரோட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 73) என்பதும், இவர் சீதாராம்பாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.