குமாரபாளையம் அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு

குமாரபாளையம் அருகே கார் மோதி கட்டிட தொழிலாளி சாவு;

Update:2022-10-27 00:15 IST

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 27). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் பிரபு சம்பவத்தன்று குமாரபாளையம் அருகே வட்டமலை பஸ் நிறுத்த பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து கோவையை நோக்கி வேகமாக சென்ற கார் பிரபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த பிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்