2 மாத பெண் குழந்தை திடீர் சாவு

2 மாத பெண் குழந்தை திடீர் சாவு

Update: 2022-09-15 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அடுத்த எருதுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்தி (வயது 24). இவருடைய 2 மாத பெண் குழந்தைக்கு கடந்த, 14-ந் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்