தொழிலாளி குடும்பத்துடன் தர்ணா

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.;

Update: 2023-10-25 18:09 GMT

வாணியம்பாடி அருகே உள்ள கணவாய்மேடு நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு அருண்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில், ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தன்னை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும், போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறியும் அருண்குமார், அவரது மனைவி யமுனா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்