அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.;

Update:2023-07-19 00:22 IST

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. 70 வயது கடந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850-ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவுத்தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும், விரைவாக நடவடிக்கை எடுத்து, செலவுத்தொகையை வழங்கிட வேண்டும். மனுக்களின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக டிராக்கிங் சிஸ்டம் உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆளவந்தார் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்ட துணை தலைவர் நீலமேகம், பொருளாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்ட தலைவர் மருதமுத்து மற்றும் குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்