நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டம்

கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-08 18:30 GMT

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் தங்கவேல் வரவேற்று பேசினார். ் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி சிறப்புரையாற்றினார். இதில் நில அளவை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

காலிப்பணியிடங்களை நிரப்ப...

களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், நில அளவை சேர்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இரவல் பணி மூலம் திட்டப்பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு மலைப்படி, அளவை படி வழங்க வேண்டும், தனி பட்டாவை தவிர்க்கும் பத்திரப்பதிவு தாரர்களை இனம் கண்டு பட்டா மனுக்களை பத்திர பதிவுத்துறை மூலம் வட்டாட்சியர் அலுவலகம் அனுப்புவதை நிறுத்திட வேண்டும்,

கூடுதல் களப்பணிகள்

தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு எனும் பெயரில் ஊழியர்களை தண்டனை குற்றவாளிகள் போல் நடத்துவதை கைவிட வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் நில அளவை களப்பணியாளர்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்ததாக நில அளவை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்