சி.ஐ.டி.யு.வினர் தர்ணா போராட்டம்
சி.ஐ.டி.யு.வினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து சி.ஐ.டி.யு. சார்பாக தர்ணா போராட்டம் அறந்தாங்கி கிளை அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு மத்திய சங்க துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தில் சி.ஐ.டி.யு.வினருக்கு ஒதுக்கப்பட்ட பஸ்களை சி.ஐ.டி.யு.வினருக்கே வழங்க வேண்டும். நிர்வாகத்தில் தொழிற்சங்க பாகுபாடு காட்ட கூடாது. போக்குவரத்து பிரிவில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். போக்குவரத்து பிரிவில் ஆளும்கட்சி தலையீட்டை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மணிமாறன், மண்டல தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் பேசினார்கள். இதில் போக்குவரத்து ஊழியர்கள் உள்பட திரளான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுந்தரம் நன்றி கூறினார்.