மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 18:14 GMT

விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

30 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் புதிய பஸ் நிலையத்தினை செயல்படுத்த கோரி விருதுநகர் புதிய பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விருதுநகர் நகராட்சி 24-வது வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தேனி வசந்தன், எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தர்ணா போராட்டத்தில் நெல்லை, நாகர்கோவில் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும். விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் இங்கு திறந்திட வேண்டும்.

வெளியூர் பஸ்கள்

விருதுநகரில் இருந்து புறப்படும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். ஆம்னி பஸ் நிலைய அலுவலகங்கள் அனைத்தையும் புதிய பஸ் நிலையத்தில் அமைத்திடவேண்டும்.

விருதுநகர் பழைய பஸ் நிலையம் நிரந்தரமாக செயல்படுவதற்கு கூடுதல் முயற்சிகள் எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்