புதுக்கோட்டை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு

புதுக்கோட்டை போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார்.

Update: 2023-05-30 18:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54), இவரது தாயார் சிகப்பி (75) ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். வீட்டில் இருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதில் கொலையாளிகளை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட 5 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தியதில் சக்திவேல் (33), அலெக்சாண்டர் (36) ஆகியோரை கைது செய்தனர். கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீசார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டேவை தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்