கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் குடற்புழு நீக்க வார விழா

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் குடற்புழு நீக்க வார விழா நடைபெற்றது.

Update: 2023-02-15 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் 49, 50 மற்றும் தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகமும் இணைந்து குடற்புழு நீக்க வார விழா நடத்தியது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரஞ்சித் வினோத் கலந்துகொண்டு குடற்புழு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அவற்றை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்