பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

Update: 2023-02-14 21:01 GMT

பணகுடி:

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பணகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பணகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அனைவரும் உறுதிமொழியும் ஏற்றனர். நிகழ்ச்சியில் ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், துணைத்தலைவர் சகாயபுஷ்பராஜ், சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது. நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசினர் கூர்நோக்கு இல்லம், கொக்கிரகுளம் மகளிர் சிறை ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மாநகர நல அலுவலர் சரோஜா, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, சுகாதார அலுவலர் இளங்கோ, பாளையங்கோட்டை அரசு ஆரம்ப நிலைய டாக்டர் தமிழரசி, பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கீதா, தாய்சேய் நல அலுவலர் ரூபியா, அரசினர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் ஜெயசங்கர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் பால்இக்னேஷியல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் தேசிய குடற்புழு நீக்க தினம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக்முகம்மது தலைமை தாங்கினார். மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துலட்சுமி கல்லூரி மாணவர்களிடம் குடற்புழு உருவாதல் மற்றும் அதை நீக்குவது குறித்து பேசினார். மேலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரி நூலகர் முகம்மது முகைதீன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்