அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

மோகனூர் ஒன்றிய பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.;

Update:2022-09-10 01:12 IST

மோகனூர்

மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை யொட்டி, மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா மோகன்குமார் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர் விஷ்ணு பிரியா, பள்ளியின் தலைமை ஆசிரியர் அருணாச்சலம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜா, சுகாதார ஆய்வாளர்கள் பாலுச்சாமி, அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது. விடுபட்ட மாணவர்களுக்கு வரும் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும். மேலும் சுகாதார முறையில் தினந்தோறும் கைகளை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி செய்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்