மகா காளியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
ஆவணி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மகா காளியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்கு தொண்டைமான் ஊரணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில், ஆவணி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காளியம்மனுக்கு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.