பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-07-17 16:57 GMT

பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக தமிழ்மாத பிறப்பு, வாரவிடுமுறை, மாத கிருத்திகை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். அந்தவகையில்  ஆடி மாத பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல் இருந்தது. மேலும் மலைக்கோவிலுக்கான பாதைகள், தரிசன வழிகள் ஆகியவற்றில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆடி மாத பிறப்பையொட்டி மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பழனி பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்