பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் அவதி

பழனி கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-03-28 20:30 GMT

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வருகை தருவார்கள். இதனால் வரும் நாட்களில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால் பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிரிவீதியில் பாதையின் நடுவில் தள்ளுவண்டிகளை அமைத்தும், தரையில் வைத்தும் வியாபாரிகள் பொருட்கள் விற்பனை செய்கின்றனர். இது பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக கூட்டம் அதிகமுள்ள நேரத்தில் நடந்து செல்லவே பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

பழனி கோவில் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால் அது உரிய முறையில் நடைபெறாததால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்