ரூ.22¾ லட்சம் பக்தர்கள் காணிக்கை

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ரூ.22¾ லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

Update: 2023-02-21 21:47 GMT

கும்பகோணம், பிப்.22-

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ரூ.22¾ லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

ஆதிகும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 17 உண்டியல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதைத்தொடர்ந்து, சுவாமிமலை துணை ஆணையர் உமாதேவி முன்னிலையில், ஆய்வாளர் தனலெட்சுமி மற்றும் கோவில் செயல்அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மேற்பார்வையில் நேற்று முன் தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

51 கிராம் தங்கம்

உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ. 22 லட்சத்து 73 ஆயிரத்து 717-ம் , 51 கிராம் தங்கமும், 261 கிராம் வெள்ளியும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பணமும் இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்