சீர்காழி வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்

ஆண்டு திருவிழாவையொட்டி பல்வேறு பகுதியில் இருந்து சீர்காழி வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர்.

Update: 2023-08-27 18:45 GMT

திருவெண்காடு:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.இந்த பேராலய ஆண்டு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை, திருவள்ளுவர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். சிலர் மாதா உருவம் பொறித்த சொரூபத்தை அலங்கரித்தும், கொடி ஏந்தியும் பாதயாத்திரையாக வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இந்த நிலையில் நேற்று சீர்காழி அருகே சுரக்காட்டில். நாகை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரளானோர் காவி உடை அணிந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்