சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
இன்று தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.
வத்திராயிருப்பு,
இன்று தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.
தை அமாவாசை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி நீர்ஓடைபகுதிகளில் வனத்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரப்பகுதிகளிலும், கோவில் வளாக பகுதிகளிலும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
பக்தர்கள் செல்லும் மலைப்பாதைகளில் 5 இடங்களில் குடிநீர் தொட்டிகளை கோவில் நிர்வாகத்தினர் அமைத்து உள்ளனர். போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக 3-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரப்பகுதிகளில் அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு பணி
தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் வனத்துறையினர், போலீசார், தீயணைப்பு படையினர் செய்து வருகின்றனர். தை அமாவாசை சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள நேற்று இரவு தாணிப்பாறை வனத்துைற கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர்.