ஏரலில் புலிவேடம் அணிந்து வந்த பக்தர்கள்
ஏரலில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புலிவேடம் அணிந்து வந்தனர்.
ஏரல்:
ஏரல் முப்பிடாதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் தசரா திருவிழாவுக்காக வேடம் அணிந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்கள் பெருமாள், சின்னத்துரை, சண்முகசுந்தரம் ஆகியோர் 31 ஆண்டுகளுக்குப் பின் புலி வேடம் அணிந்தும், வேல் என்பவர் வேடன் வேடம் அணிந்து ஏரல் பஜாரில் வலம் வந்தனர். புலி வேடம் அணிந்து வந்த பக்தர்களை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.