சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2022-06-28 20:08 GMT

சமயபுரம், ஜூன்.29-

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன். அமாவாசையையொட்டி இக்கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். அவர்கள் முடிகாணிக்கை செய்தும், கோவிலுக்கு முன்பும், விளக்கேற்றும் இடத்திலும் விளக்கேற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதேபோல் தா.பேட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. தா.பேட்டை பிள்ளாதுரை பெரியமாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்