நாளை முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-23 20:52 GMT

கபிஸ்தலம்;

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் நாளை முதல் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்களுக்கு தடை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள். அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவிலுக்குள் நாளை (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல்

இதைமீறி செல்போன்களை கொண்டு செல்பவர்களின் செல்போன் பறிமுதல் செய்யப்படும் என்றும்அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் செல்போன்களை பாதுகாக்கும் அறை கோவிலின் தெற்கு நுழைவாயிலில் உள்ளது. அதை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை கோவில் துணை ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்