சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.

Update: 2023-06-27 21:22 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக வருகிற 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் ேகட்டுக்கொண்டுள்ளது. அதேபோல மலை மீது பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்