வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

வேதாரண்யத்தில் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.

Update: 2023-08-25 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.

ஆய்வு

வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மரக்கன்றுகள் நட்டார்

இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்