வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ்ஆய்வு செய்தார்.

Update: 2022-12-22 19:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ்ஆய்வு செய்தார்.

ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-

பதிவேடுகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துறை வாரியாக நடந்து வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் தொடர்பான பதிவேடுகளை டாக்டர் பீலா ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறை மூலம் பட்டா, சிட்டா, முதியோர் உதவி தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, சான்றிதழ்கள் வழங்கும் பணிகளையும், பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனாகார்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்