ரூ.41¾ லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்

மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41¾ லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-12-29 18:45 GMT

மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.41¾ லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தார்ச்சாலை அமைக்கும் பணி

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தர்காடு மற்றும் ஆனந்ததாண்டவபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக சித்தர்காடு ஊராட்சியில் ரூ.3.80 லட்சம் செலவில் அம்பேத்கர் நகர் முதல் அகரமாப்படுகை வரை தார்ச்சாலை அமைக்கும் பணியையும், அதே பகுதியில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் மின்மோட்டார் மற்றும் போர்வெல் அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.

அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர்

தொடர்ந்து ரூ.12 லட்சத்து 52 ஆயிரம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும், ரூ.5 லட்சம் செலவில் அரசு உயர்நிலைப்பள்ளி சமையல் கூட பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோழம்பேட்டை ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஊராட்சிமன்ற கட்டிட கட்டுமானப் பணியையும், ரூ.8 லட்சம் செலவில் வானமுட்டி பெருமாள் கோவில் பகுதியில் சிமெண்டு் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

ரூ.5.58 லட்சம் செலவில் மேலத்தெருவில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், ரூ.8.17 லட்சம் செலவில் கோழிகொத்தி பெரியகுளம் பகுதியில் சிமெண்டு சாலை பணியையும், ரூ.2.76 லட்சம் செலவில் நடைபெற்று வரும் வீடுகட்டும் பணி போன்ற பல்வேறு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசன், மீனா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கனிமொழி (மாப்படுகை), செந்தமிழ்செல்வி (சோழம்பேட்டை) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்