வளர்ச்சி திட்ட பணிகள்

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சியில் செங் கமேடு முதல் மேலசெங்கமேடு கிராமம் வரை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடை பெ ற்று வருகிறது.

Update: 2023-03-16 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டநாதபுரம் ஊராட்சியில் செங் கமேடு முதல் மேலசெங்கமேடு கிராமம் வரை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடை பெ ற்று வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணியினை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விரை வாக தார்ச்சாலை அமைக்கும் பணியினை தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பின்னர் காரை மேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மணல்மேடு பாசன வாய்க்கால் தேசிய ஊரக வேல ைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமாகவும் விரை வாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சத்துணவு மையம்

இதை தொடர்ந்து காவலம்பாடி அரசு தொடக்கப்பள்ளி யில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு வகுப்பறை கட்டிட பணிகளை பார்வை யிட்டார். அந்தப்பள்ளியில் படித்து வரும் மாண-மணவிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் அதே பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை பார்வை யிட்டார். உணவை சாப்பிட்டு பார்த்தார் இதை யடுத்து கீழ சட்டநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெ க்டர், அங்கு உணவின் தரம் குறித்து அறிய உணவை சாப்பிட்டு சுவை பார்த்தர். காரை மேடு ஊராட்சியில் சிமெண்டு சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஆணையர்கள் இளங் கோவன், சரவணன், பொறியாளர் கலையரசன், சிவக்குமார், தெய்வானை , ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, தனச்செல்வி, அம்பேத்கர் உள்பட பலர் உடன் இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்