சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தியவர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தியவர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-09-24 20:10 GMT


கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் கடந்த 21.3.2023 அன்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக சென்னை நோக்கி சரக்கு வாகனத்தில் 6,612 மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக சென்னை வடக்கு கொரட்டூரை சேர்ந்த செல்வசேகரன் மகன் ஷராவந்த் என்கிற சரவணன் (வயது 44), பகலவன் என்கிற வீரப்பன் (48), டிரைவர் தேக்காட்ரி (30) ஆகியோரை போலீசார் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட சரவணன் மீது சென்னை மேற்கு அண்ணாநகர், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மொத்தம் 4 மதுகடத்தல் வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் சரவணனை கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்