10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

இருமத்தூர் அருகே 10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் அழித்தனர்.

Update: 2022-09-27 18:45 GMT

தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் அருகே டொக்கம்பட்டி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் மீன் பண்ணை அமைத்து தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் சாந்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காரிமங்கலம் தாசில்தார் சுகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பண்ணை குட்டையில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர் பண்ணை குட்டையியில் வளர்க்கப்பட்ட 10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மீன்களை அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்புறப்படுத்தி கிருமிநாசினி தெளித்து அழித்தனர். தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்