கல்வராயன் மலையில் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன் மலையில் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள கீழ் கொட்டாய் கிராமத்துக்கு வடக்கே உள்ள கூட்டாறு ஓடையில் தலா 500 லிட்டர் பிடிக்கக்கூடிய நான்கு கேன்களில் சாரய ஊறல் வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கூட்டாறு ஓடை வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் தொட்டிக்கு பயன்படுத்தப்படும், 4 கேன்களில் மொத்தம் 2 ஆயிரம் லிட்டர் சாராயம் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் அவற்றை அவர்கள் அழித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் ஊறல் அமைத்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.