500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2023-05-17 19:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள கவிநாராப்பட்டி குளத்து பகுதியில் சாராய ஊறல் போடப்பட்டு இருப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில், கைப்பற்றப்பட்ட சாராய ஊறல்களை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்