கல்வராயன்மலையில்1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறல் போலீசாரால் அழிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மணியார் பாளையம் வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் அமைத்துள்ளதாக கரியாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று மணியார்பாளையம் வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள நீரோடை அருகே பேரல்களில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், அங்கு இருந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.