செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிப்பு
செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் அழிக்கப்பட்டது;
காளையார்கோவில், மே.4-
சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி உத்தரவின் பேரில் காளையார் கோவில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார் காளையார் கோவில் பகுதியில் உள்ள பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்தார்.
காளையார்கோவில் அருகே இருப்பான் பூச்சி விலக்கு பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் சுமார் 280 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மாம்பழங்களை மண்ணில் புதைத்து அழித்தனர்.
இதுகுறித்து தோட்டத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.