வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது

புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது

Update: 2023-06-07 21:21 GMT

கரம்பயம்;

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கடை மடை பகுதி வரை தண்ணீர் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அனைத்து பாசன வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த வகையில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் செல்லி குறிச்சி ஏரி நிரம்பி வழிந்து ஓடும் நீர் கடை போக்கு வடிகால் வாய்க்கால் வழியாக அதிராம்பட்டினம் எல்லையில் உள்ள குளத்திற்கு சென்று தண்ணீர் சேர்கிறது. இந்த கடை போக்கு வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தது. செல்லிக்குறிச்சி ஏரியில் இருந்து கடை போக்கு வடிகால் வாய்க்கால் பகுதியில் பாதி அளவு தூர்வாரப்பட்டு இருந்தது. எனவே செல்லி குறிச்சி ஏரியிலிருந்து அதிராம்பட்டினம் குளம் வரை முழுவதுமாக தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து வடிகால் வாய்க்கால் முழுவதும் தூர்வாரப்பட்டு உள்ளது. தற்போது செல்லிக்குறிச்சி ஏரியில் நீர் நிரம்பினால் அந்த நீர் கடை போக்கு வடிகால் வாய்க்கால் வழியாக கடைசி வரை செல்லும். வடிகால் வாய்க்காலை தூர்வாரிய அதிகாரிகளுக்கும் இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்