உடன்குடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது

கடல்மீன்கள் வரத்து இல்லாததால் உடன்குடி மீன்மார்க்கெட் வெறிச்சோடியது.

Update: 2022-08-09 10:32 GMT

உடன்குடி:

உடன்குடி மெயின் பஜாரில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மணப்பாடு, குலசேகரன்பட்டினம், பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர் மற்றும் சுற்றுப்புற கடற்கரை பகுதியில் இருந்து ஏராளமான கடல்மீன்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். காலையில் தொடங்கி மதியம் வரை மீன் விற்பனை களைகட்டி இருக்கும். இந்த மார்க்கெட்டுக்கு தினமும் சுற்று வட்டார கிராமங்களிலுள்ள சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் குவிந்து மீன்களை வாங்கி செல்வர். கடந்த ஒருவாரமாக கடல்மீன்கள் வரத்து இல்லை. குளம், குட்டைகளில் பிடிக்கப்படும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு சிறிதளவு கொண்டு வரப்படுகிறது. இதனால் தினமும் பரபரப்பாக காணப்படும் மீன்மார்க்கெட் வெறிச்சோடி கிடக்கிறது. கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததாலும், அமலிநகர் மீனவர்கள் 2 பேர் கடலில் விழுந்து காணாமல் போனதாலும் இப்பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடல்மீன்கள் மார்க்கெட்டு வரவில்லை என மீன்வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்