டெபாசிட் சேகரிப்பு முகாம்

சிவகங்கை ரெப்கோ வங்கியில் டெபாசிட் சேகரிப்பு முகாம் நடைபெற்றது

Update: 2023-07-25 19:15 GMT

சிவகங்கை

சிவகங்கை ரெப்கோ வங்கியில் டெபாசிட் சேகரிப்பு முகாம் தொடக்க விழா புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நீலா தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வக்கீல் ஸ்ரீதரன் குத்துவிளக்கு ஏற்றினார். வங்கியின் முதன்மை மேலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறும் போது, சிவகங்கை ரெப்கோ வங்கியில் 400 நாட்களுக்கு டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீத வட்டியும் மற்றவர்களுக்கு 7.75 வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ரெப்கோ வங்கி, ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவனம், ரெப்கோ நுண்கடன் நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்