தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக நிதி மறுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update: 2024-09-09 04:21 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என்று மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தேசிய கல்வி கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்குத் தாராளமாக வெகுமதி அளிப்பது - இதுதான் மத்திய பா.ஜ.க. அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் முறையா?

நம் தேசம் மற்றும் மக்களின் முடிவுக்கே இதை விட்டுவிடுகிறேன்!" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்