ஸ்ரீவைகுண்டம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவைகுண்டம் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல், கொசுப்புழு தடுப்பு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கிராம உதயம் நிறுவனர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ஆறுமுககணி வரவேற்றார்.
கிராம உதயம் தனி அலுவலர் ராமச்சந்திரன், பகுதி பொறுப்பாளர் பிரேமா, மைய தலைவர்கள் சுஜிதா, பேச்சியம்மாள் ஆகியோர் பேசினர். டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஆனந்தசெல்வன் நன்றி கூறினார்.