டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் - பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பருவ மழை நிலவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-08-09 01:02 GMT



சென்னை,

மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்மேற்கு பருவ மழை நிலவுவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருந்தால், அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு அனுப்ப வேண்டும்.

வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மழைநீர் தேங்காதவகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.

தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருட்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்