சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான இயக்கத்தினர் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
திசையன்விளையில் பட்டியல் இனஇளைஞர் முத்தையா ஆணவப்படுகொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், ஏ.ஐ.டி.யு.சி.மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் சண்முகசுதாகர், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், செயலாளர் துரைபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக் கண்ணன், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், மாவட்ட செயலாளர் திருக்குமரன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழர் உரிமை மீட்புகளம் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி, பூர்வீக தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் மங்கள்ராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.