பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருளர், காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் உடனடியாக 17 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

Update: 2023-05-09 18:37 GMT

வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருளர், காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் உடனடியாக 17 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ரேணுகா, ஏழுமலை, மாவட்ட துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் இருளர் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென தாலுகா அலுவலக வளாகத்திலேயே விறகுக்கொண்டு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்து, உணவு அருந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 2.30 மணி அளவில் முடிந்தது. 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

17 பேருக்கு வீட்டுமனை பட்டா

பின்னர் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மழையூர், ஜப்திகாரணி, மோசூர் ஆகிய கிராமங்களில் உள்ள 17 பேருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் வட்டார செயலாளர் அப்துல் காதர், மாவட்ட விவசாய சங்க தலைவர் ஹரிதாசு, மாவட்ட பொருளாளர் சுகுமார், மாவட்ட செயலாளர் செல்வன், மாநில பொதுச் செயலாளர் அய்யனார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்