வாடகை வசூலை மாநகராட்சி நேரில் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
வாடகை வசூலை மாநகராட்சி நேரில் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி., மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, பகுதி செயலாளர்கள் நாராயணன், சரவணன், ஒடுக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் டெண்டரை ரத்து செய்துவிட்டு, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக கடை வாடகை வசூல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க நிர்வாகிகள் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமாவிடம் நேரில் வழங்கினர்.