மத்திய அரசு பணியாளர் தேர்வை அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு பணியாளர் தேர்வை அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சேதுபதி, பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை செயலாளர் செல்வராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.