காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-17 16:54 GMT


குடியாத்தம் காட்பாடிரோடு தலைமை தபால் அலுவலகம் எதிரில் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல் காந்தி மீதான அமலாக்கத் துறையின் பொய் வழக்கை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீதான டெல்லி காவல்துறையின் அத்துமீறலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் வீராங்கன், செல்வகுமார், விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கிருபானந்தம், முன்னாள் மாநில மாணவரணி தலைவர் தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, நகரமன்ற உறுப்பினர் விஜயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவராஜ், மாநில பேச்சாளர் துரைமுருகேசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்.எம்.டி விக்ரம் உள்பட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்