ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

போளூர் தாலுகா அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-12 17:40 GMT

போளூர், ஆக.13-

போளூர் தாலுகா அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் போளூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் அபிபுல்லாகான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் மற்றும் வனத்தோட்ட காவலர்கள் ஆகியோருக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்