இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர, தாலுகா குழுக்கள் சார்பில் மணிப்பூர் மக்களை பிளவுபடுத்திய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர, ஒன்றிய துணை செயலாளர் ஜி.தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மகேஷ்பாபு, கே.கல்பனாசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லதா, மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம், மாவட்ட பொருளாளர் காவேரி, ஒன்றிய நகரச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மக்களை பிளவுபடுத்திய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பேரணாம்பட்டு ஒன்றிய, நகர செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாக குழு உறுப்பினர் கே.சி.பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.