தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்
விக்கிரவாண்டி
தீயணைப்புத் துறையின் தீ தொண்டு வாரத்தையொட்டி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்கம் நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமை தாங்கினார். மகப்பேறு பிரிவு துறைத்தலைவர் டாக்டர்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னணி தீயணைப்பு வீரர்கள் செந்தமிழ்செல்வன் சிவக்குமார், விஜயகுமார், தீயணைப்பு வீரர்கள் மகேஷ், வேல்முருகன், பிரபு ஆகியோரை கொண்ட குழுவினர் தீ விபத்து தடுப்பு குறித்து செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.