கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-03-21 09:36 GMT

திருவள்ளூர் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை சார்பில் நேற்று காலை திருவள்ளூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட பூசாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. கிராம கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மாத ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவிற்குப்பின் அவரது மனைவிக்கு அந்த தொகை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஸ்ரீதர் சாமி தலைமை தாங்கினார். பா.ஜ.க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அதன் பின்னர் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்